தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து 7.5 கோடி ரூபாய் பெறுமதியான “குஷ்” போதைப்பொருள் தொகையை கடத்தி வந்த நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சுங்க திணைக்கள போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரும் விமான நிலைய சுங்க அதிகாரிகளும் இணைந்து இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகிறது.

பேங்கொக்கில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த இவரது பயணப்பையை சோதனை செய்தபோது, சாமர்த்தியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கிலோ 500 கிராம் “குஷ்” போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் விமான நிலைய சுங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here