மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றானது இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வரையில் பலத்த வேகத்தில் வீசக்கூடும். 

அத்துடன், குறித்த கடற்பரப்புகள் கொந்தளிப்பாகவும், கடல் அலைகள் உயர்வாகவும் காணப்படுவதுடன் குறித்த பகுதிகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அதேநேரம், இன்று முதல் மறு அறிவித்தல் வரை மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் கடற்றொழில் மற்றும் கடற்பயணங்களைத் தவிர்க்குமாறு மீனவ சமூகங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் ஏற்படவிருக்கும் சீரற்ற காலநிலை தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கோரியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here