மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 8 பேரை நேற்று (05.12.2024) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாவட்டத்தில் பல குற்ற செயல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஏறாவூர் பொலிஸ் நிலைய பிரதேசத்தைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு அந்தந்த நீதிமன்ற நியாயதிக்க எல்லையிலுள்ள நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்து பின்னர் நீதிமன்றங்களுக்கு ஆஜராகாமல் இருந்தவர்களுக்கே பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகியவர்களை கண்டறிவதற்காக முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
[மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்]







