இரத்மலானை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்தினை  ஏற்படுத்தி விட்டு காரில் தப்பிச் சென்ற நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உடுகமுவ பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய காரின் சாரதியும் உடுகம்பொல மற்றும் கித்துல்கல பிரதேசங்களில் வசிக்கும் 19, 20 மற்றும் 26 வயதுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் சிலர் விபத்தை ஏற்படுத்திச் தப்பிச் சென்ற காரை மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்று சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளார்கள்.

கைது செய்யப்பட்ட காரின் சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், விபத்தின் போது அவர் மது அருந்தியிருந்தமை தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here