யாழ்ப்பாணம் – கண்டி ஏ 9 பிரதான வீதியில் தம்புள்ளை, புலாகல பகுதியில் நேற்று புதன்கிழமை (11.12.2024) மாலை இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கெக்கிராவ பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவில் கடமையாற்றும் கலன்பிந்துனுவெவ,மொரகொட பகுதியை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
தம்புள்ளையிலிருந்து கெக்கிராவ நோக்கிப் பயணித்த கெப் வாகனம் ஒன்று கெக்கிராவையிலிருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் கடமை நிமித்தம் மாத்தளை நீதிமன்றத்திற்கு சென்று மீண்டும் கெக்கிராவ பொலிஸ் நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








