உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அளுத்கம – எல்பிட்டிய வீதியில் இன்று வியாழக்கிழமை (12.12.2024) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் தெரிவித்தனர்.

செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் உரகஸ்மன்ஹந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரன்தொட்டுவில பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here