நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரின் நீண்ட நாள் காதலன் ஆண்டனி தட்டில் இருவருக்கும் இன்றைய தினம் கோவாவில் வெகுவிமர்சையாக திருமணம் நடைபெற்றுள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ்

2015 இல் வெளியான “இது என்ன மாயம்” என்ற திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தாலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ரஜினி முருகன் திரைப்படம் தான் இவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது.

அதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து வந்த வாய்ப்புகள் எல்லாம் பெரிய இடமாகத்தான் இருந்தது. அதை தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ, பைரவா, சாமி – 2, அண்ணாத்த, சர்கார் போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருகின்றார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் “தெறி” படத்தின் இந்தி ரீமேக்கான “பேபி ஜான்” படத்தின் மூலமாக இந்தி சினிமாவிலும் அறிமுகமாகிறார்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ், அவரின் நீண்ட நாள் காதலன் ஆண்டனி தட்டிலை இன்றைய தினம் கோவாவில் திருமணம் செய்துக்கொண்டுள்ளார். குறித்த திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here