இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவுக்கு சர்வதேச ஒலிம்பிக் குழு மற்றும் ஆசிய ஒலிம்பிக் பேரவை ஆகியவை வழங்கும் நிதி உதவி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், ஒலிம்பிக் வீரர்களுக்கான புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் தொடர்ந்து வீரர்களுக்கு நேரடியாக வழங்கப்படும் என சர்வதேச ஒலிம்பிக் குழுவானது இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளது.

தேசிய ஒலிம்பிக் குழுவின் விசேட பொதுக்கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற போது, தேசிய ஒலிம்பிக் குழுவின் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.

தேசிய ஒலிம்பிக் குழுவின் தற்போதைய பதவிக்காலம் 2026ஆம் ஆண்டு ஏப்ரலுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here