யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, சுன்னாகம் ஆகிய பகுதிகளை அண்டிய பல்பொருள் அங்காடிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தகவல் கிடைத்தால் அறியத் தருமாறு காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்பொருள் அங்காடிகளின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்குக் காவல்துறையினர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
சுன்னாகம் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் சூட்சுமமான முறையில் பொருள்களைத் திருடும் சம்பவங்கள் அங்குள்ள பாதுகாப்பு கெமராக்களில் பதிவாகியுள்ளன.
இது குறித்து சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.








