தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு அமைய, எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னர் வர்த்தகர்களால் அரிசி இறக்குமதி செய்யப்பட்டால் அவை மீண்டும் திருப்பி அனுப்பப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரவித்துள்ளார்.
அரிசி இறக்குமதிக்காக வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் 10ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 31ஆம் திகதி வரை 86,000 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வசந்த சமரசிங்க தெரவித்துள்ளார்.








