கொழும்பு – கோட்டை பகுதியில் உள்ள காவல்துறை தலைமையகத்தின் பழைய கட்டடத்தின் 5வது மாடியில் பொருத்தப்பட்டிருந்த 7 சி.சி.ரி.வி கமராக்கள் களவாடப்பட்டமை தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கோட்டை காவல்நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
காவல்துறை தலைமையகத்தின் பழைய கட்டடத்தில் பல காவல்துறை பிரிவுகள் இயங்குகின்றன.
அத்துடன் அங்குப் பலத்த பாதுகாப்பும் காணப்படுகின்ற நிலையில் இவ்வாறு சி.சி.ரி.வி கமராக்கள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.







