புதிய கல்வியாண்டு ஆரம்பமாகிவுள்ள நிலையில் மாணவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் சாத்தியம் குறித்து சுகாதார அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

சிறுவர்களுக்கான லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் சுவாச நோய்களுக்கான விசேட வைத்தியர் சன்ன டி சில்வா, பல்வேறு வைரஸ் சுவாச நோய்கள் பாடசாலைகளில் பரவக்கூடும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மாணவர்களின் ஆரோக்கியத்தில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிகாரிகள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் எனவும் சுவாச நோய்களின் அபாயத்தைக் குறைக்க உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here