சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கப் பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அபுதாபியில் இருந்து பயணி ஒருவர் வருவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, விமான நிலைய பொலிஸார் சந்தேக நபரை நேற்று (04) இரவு கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட போது, சந்தேகநபரிடம் இருந்து நான்கு தங்க நெக்லஸ்கள், ஒரு பென்டன்ட், இரண்டு வளையல்கள், ஒரு தங்க வளையல் மற்றும் ஒரு தங்க மோதிரம் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட நபர் வெலம்பொட பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








