பங்களாதேஷ் ரி20 அணியின் தலைவரான நஜ்முல் ஹொசைன் ஷன்டோ தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
தென்னாபிரிக்க அணியுடனான தொடர் நிறைவுக்கு வந்ததன் பின்னர், இவர் தனக்கு ரி 20 அணித் தலைவர் பதவியில் விருப்பமின்மை இருப்பதை சுட்டிக்காட்டியதாக தகவல்கள் தெரிவித்திருந்த நிலையிலேயே நஜ்முல் ஹொசைன் ஷன்டோவின் பதவி விலகலும் நடைபெற்றிருக்கின்றது.
எனினும், பங்களாதேஷ் அணியினை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் நஜ்முல் தொடர்ந்து வழிநடத்துவார் எனக் குறிப்பிடப்படுகிறது. பங்களாதேஷ் கிரிக்கெட் அணி புதிய ரி 20 அணித்தலைவர் ஒருவரினை இன்னும் அறிவிக்காதபோதிலும் லிடன் தாஸ் குறிப்பிட்ட பதவிக்கு புதிதாக நியமனம் செய்யப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
லிடன் தாஸ் தலைமையிலான பங்களாதேஷ் தரப்பு மேற்கிந்திய தீவுகள் அணியுடனான ரி 20 தொடரினை அவர்களது சொந்த மண்ணில் வைத்து 30 என அண்மையில் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.








