முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்று (10.01.2025) களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு இராஜாங்க அமைச்சராகவும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராகவும் பதவி வகித்த வேளையில் காணி சீர்திருத்த ஆணைக் குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் அவர்களுடன் காணி தொடர்பாக தொலைபேசி மூலமாக ஏற்படுத்திக் கொண்ட உரையாடலின் போது குறித்த காணி ஆணைக் குழுவின் பணிப்பாளருக்கு சிவனேசதுரை சந்திரகாந்தன் அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்து காணி ஆணையாளர் தொடுத்த வழக்கிலேயே முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்றைய தினம் நீதி மன்றில் ஆஜராகி இருந்தார்.
[மட்டக்களப்பு நிருபர் – சதானந்தம் ஸோபிதன்]








