பொரளையில் 24 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் 16 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (10) இரவு இடம்பெற்றுள்ளதுடன், ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பொரளை, செர்பன்டைன் வீதியில் வசிக்கும் 16 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமி மன உளைச்சலுக்கு ஆளாகி சில காலமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சிறுமி மாடியின் பால்கனியில் இருந்து குதித்தாரா அல்லது தவறி விழுந்தாரா என்பது தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








