புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை பொலிஸ் பிரிவின் தென்னமரம் பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் 20 மில்லியன் ரூபாவிற்கு குறித்த புராதன பொருளை விற்க முயற்சித்த போது கைது செய்யப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
29 முதல் 57 வயதுக்கு இடைப்பட்ட சந்தேக நபர்கள், புலியங்குளம், இச்சலாம்பற்று மற்றும் திருகோணமலையை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
(AI புகைப்படம்)








