காலி தேசிய வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் பொருத்தப்பட்டிருந்த மின்மாற்றியில் ( transformer) இன்று நண்பகல் 12 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
விபத்தை தொடர்ந்து நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வைத்தியசாலை அதிகாரிகள் உடனடியாக குறித்த பிரிவுக்கான மின்சார விநியோகத்தை துண்டித்துள்ளனர்.
வைத்தியசாலை ஊழியர்கள் காலி மாநகர சபையின் நகர தீயணைப்பு பிரிவினருடன் இணைந்து விரைவாக செயல்பட்டு, தீ பரவும் முன்னர் அதனை கட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தீயினால் பெரியளவில் சேதம் ஏற்படவில்லை எனவும், நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் வைத்தியசாலை தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






