ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சீனாவை சென்றடைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்றிரவு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இந்தநிலையில், இலங்கை நேரப்படி இன்று காலை 7.50 அளவில் அவர் சீனாவின் பெய்ஜிங் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.

அதன்போது, சீன பிரதி வெளிவிவகார அமைச்சர் சென் சியாடோங்கினால் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு சம்பிரதாயபூர்வமாக வரவேற்பளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here