நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (15) பிற்பகல் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை பீஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் சந்திக்கவுள்ளார்.
ஜனாதிபதி திஸாநாயக்கவிற்கும் ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடலைத் தொடர்ந்து பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.








