இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளையதினம் நடைபெறவுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் திருகோணமலையில் நடைபெறவுள்ளது.

இதன்போது, கட்சிக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு, கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள ஒழுக்காற்று நடவடிக்கை, இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாடு, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here