துறைமுகத்தில் கொள்கலன்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டாலும் கடுமையான நெரிசல் காணப்படுவதாக வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொள்கலன் அனுமதி தாமதங்களைக் குறைக்க சுங்க ஆய்வுகளுக்கு ஒரு புதிய முறை தேவைப்படுவதாக அதன் தலைவர் ரஞ்சித் லியனாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்படும் தாமதங்கள் காரணமாக நீண்ட கொள்கலன் வரிசைகள் இன்னும் காணப்படுகின்றன.

நீண்ட வரிசையில் காத்திருக்கும் கொள்கலன் லொறியின் சாரதிகள், சுங்கத்துறை 24 மணிநேர சேவைகளை வழங்குவதாகக் கூறினாலும், அது முறையாகச் செயல்படவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

இதற்கிடையில், தற்போது கொள்கலன் லொறிகளின் சாரதிகள் பற்றாக்குறை இருப்பதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here