அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட தொல்பொருட்கள் என சந்தேகிக்கப்படும் பொருட்களை வைத்திருந்த  நபர் ஒருவரை கிரநேகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (24) பிற்பகல், கிரனேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உல்பதாய பகுதியில் பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தங்க நிற புத்தர் சிலை, தங்க தாமரை வடிவிலான 24 இதழ்கள் கொண்ட மலர்  போன்றவற்றை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 48 வயதுடையவர் ஆவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரனேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here