சர்வதேச சந்தையில் இன்று (31) மசகு எண்ணெய் விலைகளில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டபிள்யு.டி.ஐ (WTI) மசகு எண்ணெய் விலை 1.71% ஆல் குறைந்து, ஒரு பீப்பாயின் விலை 82.16 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
பிரெண்ட் (Brent) மசகு எண்ணெய் விலை 1.16% ஆல் குறைந்து, ஒரு பீப்பாயின் விலை 88 அமெரிக்க டொலராக உள்ளது.
மர்பன் (Murban) மசகு எண்ணெய் விலை 2.60% ஆல் குறைந்து, ஒரு பீப்பாயின் விலை 85.71 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (CPC) விலை சூத்திரத்தின்படி, மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் இன்று (31) மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிகிறது.
எனினும், கூட்டுத்தாபனம் ஈட்டியுள்ள லாபத்தைக் கருத்திற்கொண்டு தற்போது எரிபொருள் விலையில் திருத்தம் செய்யும் எந்தத் திட்டமும் இல்லை என அதன் தலைவர் டி.ஜே ராஜகருண தெரிவித்துள்ளார்.
அரசாங்க நிதி தொடர்பான குழுவில் (COPA) கருத்துத் தெரிவித்த அவர், எதிர்காலத்தில் உலக சந்தையில் நிலவக் கூடிய மசகு எண்ணெய் விலையின் நிலையற்ற தன்மை காரணமாக எரிபொருள் விலையைக் குறைக்க முடியாதிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
“பொதுவாக விலை 50% முதல் 60% வரை அதிகரித்தது. எனினும் கூட்டுத்தாபனம் எண்ணெய் விலையை 4 வீதம் மாத்திரமே அதிகரித்தது என அவர் விளக்கம் அளித்துள்ளார்.








