முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ஷ குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெலியத்த பகுதியில் வைத்து இன்று (25/1/2025) காலை அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
கதிர்காமம் பிரதேசத்தில் காணி ஒன்றின் உரிமை தொடர்பில் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.







