நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 18 மாவட்டங்களில் 27,751 குடும்பங்களைச் சேர்ந்த 92,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் 17,952 குடும்பங்களைச் சேர்ந்த 56,878 பேர் பலத்த மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வட மாகாணத்தில், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் 7,970 குடும்பங்களைச் சேர்ந்த 29,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே வடமத்திய மாகாணத்தில் 1,369 குடும்பங்களைச் சேர்ந்த 4,599 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக 319 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

7 மாகாணங்களில் 142 குடும்பங்களைச் சேர்ந்த 438 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், 320 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அதிக மழை காரணமாக நாட்டிலுள்ள 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 35 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here