சுமார் 900 கோடி ரூபா பெறுமதியான, 200 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யத் தயாராக இருந்த சிவப்பு பாதரசம் அடங்கிய சிலிண்டருடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் பயன்படுத்தப்படும் நீர்மூழ்கிக் கப்பல்களின் தொழில்நுட்பத்திற்குப் பயன்படுத்தப்படும் சிவப்பு பாதரசம் அடங்கிய சிலிண்டர் இருப்பதாகவும், பின்னர் அதனை வாங்கிக் கொள்ளலாம் என்றும் பாணந்துறை வர்த்தகர் ஒருவருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, பாணந்துறை வர்த்தகர் ஒருவருக்குக் கொண்டு செல்லப்பட்ட சிலிண்டரை விற்பனை செய்யத் தயாராகும் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதை ஒரு இந்தியருக்கு பெரிய தொகைக்கு விற்க தயாரான போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்கள் வந்த காரில் சுமார் இரண்டரை அடி உயரமுள்ள சிவப்பு பாதரசம் அடங்கிய சிலிண்டர் இருந்ததாகக் கூறப்பட்ட காரும் பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டது.

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சிலிண்டரில் சிவப்பு பாதரசம் கரைசலை சோதனை செய்தபோது அதில் திருவானை, கிரானைட் மற்றும் இதர பாறைகள் கலந்த கலவை இருந்ததாக சோதனையில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here