அவிசாவளை வித்தியால மாவத்தையில் உள்ள தற்காலிக தங்குமிடமொன்றில் தங்கியிருந்த இளைஞன் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக அவிசாவளை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைஞனுக்கும், நேற்று இரவு அல்லது இன்று அதிகாலை தங்குமிடத்தில் தங்கியிருந்த இளைஞர்கள் குழுவிற்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதமே இந்தக் கொலைச் சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அவிசாவளை தலைமையக பொலிஸ் நிலைய சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மஸ்கெலியா சாமிமலை சூரியகந்த பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவிசாவளை பிரதேசத்தில் வியாபார வேலை வாய்ப்புக்காக இந்த தங்குமிடத்திற்கு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here