வடமாகாணத்தில் நிலவும் சர்ச்சைகள் மீளாய்வு செய்யப்பட்டு, உரியவர்களிடம் காணிகளை விரைவாக மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மக்களுக்குச் சொந்தமான காணிகள் அவர்களிடமே இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இன்று (31) உரையாற்றிய அவர், யாழ்ப்பாண ஜனாதிபதி மாளிகையை பிராந்தியத்திற்கு நன்மை பயக்கும் திட்டத்திற்காக மீளப் பயன்படுத்துவதற்கான திட்டத்தையும் அறிவித்தார்.
பரந்தன், மாங்குளம், காங்கேசன்துறை ஆகிய பகுதிகளில் 3 புதிய கைத்தொழில் வலயங்கள், போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் அரச நிறுவனங்களில் தமிழ் பேசும் இளைஞர்களுக்கான வாய்ப்புகளை அதிகரித்தல் உள்ளிட்ட முக்கிய முயற்சிகளை ஜனாதிபதி அவர்கள் எடுத்துரைத்தார்.
மீன்பிடி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான இராஜதந்திர முயற்சிகளை அவர் மேலும் வலியுறுத்தினார் மற்றும் மாகாணத்தில் சுத்தமான குடிநீர் அணுகலை விரிவுபடுத்துவதற்கு முன்னுரிமை அளித்தார்.








