புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர பயன்படுத்தியதாக கூறப்படும் சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட ஜீப் வண்டியின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சட்டவிரோத சொத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பிரிவு இதனைப் பொறுப்பேற்றுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவிற்கு சொந்தமான காணி மற்றும் அவரது வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாகன பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அந்த வாகன பாங்கள் கடுமையாக சேதமடைந்திருந்தாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here