இபலோகம, ரணஜயபுர பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இபலோகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்த கொண்டிருந்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதி விட்டு விலகி, வீதிக்கு அருகிலுள்ள மரத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இபலோகம ரணஜயபுர பகுதியைச் சேர்ந்த ஹேரத் முதியன்சேலகே சானுக தேசான் ஹேரத் என்ற 25 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் இராணுவ லான்ஸ் கோப்ரலாக கடமையாற்றி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here