ராகம, பத்கமுள்ள பகுதியில் ஒரு கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 27 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, நடத்தப்பட்ட சோதனையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.








