முகமாலை வடக்கு A9 வீதி ஓரமாக வியாபார நிலையம் ஒன்றினை  நடாத்தி வரும் செ.நாகசெல்வம் என்பவரது கடை மீது இனம் தெரியாத நபர்களால் 19.02.2025 நள்ளிரவு 12.30 மணியளவில் பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிந்த கடையின் மீது 2020ஆண்டில் கழிவு ஓயில் வீசப்பட்டதுடன் 2021 ம் ஆண்டில் மாலை மூகமூடி அணிந்த மோட்டார் சைக்கிளில் சென்ற  இரண்டு நபர்களால் இரும்புக்கம்பி கொண்டு கடையின் சொத்துக்கள் அடித்து உடைக்கப்பட்டதுடன் சந்தேக நபர்களும் தப்பிச் சென்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு மூன்றாவது தடவையாக குறித்த சம்பவம் இடம்  பெற்றுள்ளது.

இது தொடர்பில் பளை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

[யாழ் நிருபர் – இரட்னசிங்கம் முரளிதரன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here