ஏறாவூரில்  வர்த்தகர் ஒருவரைத் தாக்கிய இரு பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக  உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் – மைலம்பாவெளி  பிராதன வீதியில் மதுபோதையில் சிவில் உடையில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த இரு பொலிஸ் அதிகாரிகளின்  மோட்டார் சைக்கிளை முந்திச் சென்ற வர்த்தகர் ஒருவரை தலைக்கவசத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்கள்.

இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை (18/02/2025) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றது.

இச் சம்பவத்துடன்  தொடர்புபட்ட இரு பொலிஸ் அதிகாரிகளும் உடனடியாக வியாழக்கிழமை (20/02/2025) பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாகக் குறித்த உயர் பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here