Wednesday, June 10, 2026
No menu items!

பணி இடைநீக்கம்

தேசபந்துவின் விசாரணை தொடர்பில் சபாநாயகரின் எழுத்து மூல அறிவிப்பு!

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்படவுள்ள குழுவிற்கு உறுப்பினர் ஒருவரை நியமிக்க பெயர் ஒன்றை பரிந்துரைக்குமாறு சபாநாயகர், பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளைகளின்படி, இந்தக் குழுவிற்கு ஒரு உறுப்பினரை நியமிப்பது பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் இணக்கத்துடன் மேற்கொள்ளப்பட...

கஞ்சா எண்ணெய் பொதியை விடுவிக்க முயற்சி – சுங்க பரிசோதகர் கைது..!

3 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கஞ்சா எண்ணெய் பொதியை விடுவிக்க முயன்றதற்காக சுங்க பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவிலிருந்து மாலபே பகுதியில் உள்ள ஒருவருக்கு அனுப்பப்பட்ட குறித்த பொதியை சுங்க பரிசோதகர் விடுவிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. எனினும், 3 கிலோகிராம் 200 கிராம் கஞ்சா எண்ணெயுடன் அவர் கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளரும்...

தொடருந்து சமிக்ஞை அதிகாரிகளின் அசமந்தம் – ஏற்படவிருந்த பாரிய விபத்து!

கண்டி பிரதான தொடருந்து நிலையத்தில் கவனக்குறைவாகச் செயற்பட்ட தொடருந்து சமிக்ஞைகளைக் கையாளும் பணியாளர்கள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பொடிமெனிக்கே தொடருந்து பயணித்தின் போது கடமையிலிருந்த இருவரும் உறங்கிய நிலையில், குறித்த தொடருந்து கண்டி தொடருந்து நிலையத்தின் 3ஆவது மேடையை சென்றடைந்தது. அந்த நேரத்தில் தொடருந்து சமிக்ஞைகள் உரிய முறையில் ஒளிரவில்லை...

வர்த்தகரை தாக்கிய பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்..!

ஏறாவூரில்  வர்த்தகர் ஒருவரைத் தாக்கிய இரு பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக  உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏறாவூர் - மைலம்பாவெளி  பிராதன வீதியில் மதுபோதையில் சிவில் உடையில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த இரு பொலிஸ் அதிகாரிகளின்  மோட்டார் சைக்கிளை முந்திச் சென்ற வர்த்தகர் ஒருவரை தலைக்கவசத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்கள். இந்த சம்பவம் கடந்த...

சித்திரவதை செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு பணி இடைநீக்கம்!

பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த மூன்று காவல்துறை பொறுப்பதிகாரிகள் உட்பட நான்கு காவல்துறை அதிகாரிகளைப் பணி இடைநீக்கம் செய்வதற்குப் பதில் காவல்துறைமா அதிபர் நேற்று நடவடிக்கை எடுத்துள்ளார். தில்ஷான் மதுசங்க என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு, சுமார் 6 நாட்கள் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீரகெட்டிய...

தன்னை பணி இடைநீக்கம் செய்தது தொடர்பான கடிதம் கிடைக்கவில்லை; சமல் சஞ்சீவ!

தன்னை பணி இடைநீக்கம் செய்தது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் இன்னும் தனக்கு கிடைக்கவில்லை என்று வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். அவ்வாறானதொரு கடிதம் அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டிருக்குமாக இருந்தால், தனக்கு கிடைப்பதற்கு முன்னர் ஊடகங்களுக்கு எவ்வாறு வெளியிடப்பட்டது என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். கொழும்பில்...

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் பணி இடைநீக்கம்….!

பமுனுகம பகுதியில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களைப் பலமாகத் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பமுனுகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களே பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, போபிட்டிய, பமுனுகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வசிக்கும் இரு இளைஞர்கள் திருட்டு சம்பவம் ஒன்று...

நான்கு கைதிகள் தப்பியோட்டம்; சிறைச்சாலை அதிகாரிகள் பணி இடைநீக்கம்…!

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் மூன்று சிறைச்சாலை அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் காமினி திசாநாயக்க இது தொடர்பில் தெரிவிக்கையில், அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கைதிகள் கடந்த 1 ஆம் திகதி அன்று சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றிருந்தனர். போதைப்பொருள் கடத்தல்கள், திருட்டு...
- Advertisement -spot_img

Latest News

இந்தியப் பிரதமரின் வரலாற்று சாதனை; ஜனாதிபதி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார். இன்று ஜூன் பத்துடன், அவர்...
- Advertisement -spot_img