கொழும்பிலிருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த விசேட அதிவேக தொடருந்தில் இன்று (26) பெண் ஒருவர் மோதி உயிரிழந்துள்ளதாக அளுத்கம காவல்துறையினர் தெரிவித்தனர்.
அளுத்கம, களுவா மோதர, தெவல வீதிக்கு அண்மித்த பகுதியில் இன்று காலை 7.40 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த பெண் அளுத்கம களுவா மோதர பகுதியில் வசிக்கும் 67 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
இந்த பெண் தனது வீட்டிற்கு அருகில் உள்ள தொடருந்து பாதையின் ஓரமாக சென்று கொண்டிருந்த போது தொடருந்தில் மோதுண்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் பிரேதப் பரிசோதனைக்காக களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.








