மொனராகலை – சியம்பலாண்டுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மடுகம பகுதியில் மின்னல் தாக்கி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக சியம்பலாண்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (26/02/2025) இரவு இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் சியம்பலாண்டுவ மடுகம பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஆவார்.
உயிரிழந்த இளைஞன் தனது மோட்டார் சைக்கிளை பழுது பார்ப்பதற்காக தனது நண்பனை சந்திக்கச் சென்றுள்ள நிலையில் கடும் மழை காரணமாக மரம் ஒன்றிற்கு அடியில் நின்றுகொண்டிருந்துள்ளார்.
இதன்போது, இளைஞனும் அவருடன் இருந்த 24 வயதுடைய நபரும் மின்னல் தாக்கி காயமடைந்துள்ள நிலையில் சியம்பலாண்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் சியம்பலாண்டுவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக சியம்பலாண்டுவ பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.







