தனது செயற்கை காலில் போதைப்பொருளை மறைத்து வைத்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபரொருவர் இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹோமாகம – முனசிங்ககம பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் செயற்கை காலில் இருந்து கீழ்நோக்கி நீண்டு கொண்டிருந்த துளையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








