தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் நேற்று (06.03.2025) வீடொன்றின் பின்புறமாக கைவிடப்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
50 வயது மதிக்கத்தக்க நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்தமைக்கான காரணத்தை கண்டறிவதற்காக தடயவியல் பொலிஸாரின் உதவி நாடப்பட்டுள்ளதுடன் இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
[கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்]








