கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கான உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சன்முகராஜா ஜீவராசா இன்று (07.03.2025) செலுத்தியுள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்டு தெரிவாகிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சன்முகராஜா ஜீவராசா கடந்த 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டமைக்காக அவரை கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளரால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதை அடுத்து தான் சுயேட்சையாக களமிறங்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பச்சிலைப்பள்ளி ஆகிய இரு பிரதேச சபைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குறித்த கரைச்சி பிரதேச சபைக்கு மாத்திரம் தனது கட்டுப்பாட்டத்தை செலுத்தியுள்ளார்.
இன்று (07-03-2025) காலை ஒன்பது முப்பது மணிக்கு குறித்த நபர் தனது கட்டுப்பணத்தை கிளிநொச்சி மாவட்ட தேர்தல் செயலகத்தில் செலுத்தியுள்ளார்.
[கிளிநொச்சி நிருபர் – பரமசிவன்]







