பெருந்தோட்ட மக்களின் வீடமைப்பு பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமாயின் அவர்களுக்கு காணியுரிமை வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற குழு நிலை விவாதத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மலையகத்தில் மாற்றமொன்று ஏற்பட வேண்டுமாயின் காணியுரிமையே வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.







