கடந்த காலங்களில் கல்விக்கென நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும் பாரபட்சம் பார்க்கப்பட்டதாக பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

மலையகத்தில் 400ற்கும் மேற்பட்ட பயிற்றப்படாத ஆசிரியர்கள் உள்ளதாகவும் எனவே அவர்களுக்கு உடனடியாக பயிற்சிகளை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இன்றைய நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தார்.

வடக்கு,கிழக்கில் உள்ள ஆசிரியர்களை மலையகப் பகுதிகளுக்கு நியமிப்பதன் மூலம் மலையகத்தில் உள்ள பிள்ளைகளின் கல்வியை மேலும் வலுப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டினார்.

மலையக சமூகம் இன்றும் கல்வியில் பின்தங்கியிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

கடந்த கால அரசாங்கங்கள் மலையக சமூகத்திற்கு சிறந்த முறையில் கல்வியை வழங்காமையே இதற்குக் காரணம் என சுந்தரலிங்கம் பிரதீப் குறிப்பிட்டார்.

இதற்காகக் கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உள்ளிட்டவர்கள் போராடியதாகத் தெரிவித்தார்.

எனினும் கடந்த கால அரசாங்கங்கள் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.

மலையகத்திற்காக அனைவரும் ஒன்றிணைவோம் எனவும் சபையில் சுந்தரலிங்கம் பிரதீப் கூறியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here