தனது பிரத்தியேக வகுப்புகளுக்குச் சென்ற மாணவர்களைத் தாக்கிய தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
நுகேகொடை மற்றும் கம்பஹா பகுதிகளில் தனியார் வகுப்புகளை நடத்தும் ஆசிரியர் ஒருவர், தனது வகுப்பில் கல்வி கற்கும் மாணவனை ஒரு மாணவியைக் கொண்டு தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணையை ஆரம்பித்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட பாடசாலை ஆசிரியரை இன்று அதிகார சபையில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் அவ்வாறு செய்யாவிட்டால், அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று அதிகார சபை தெரிவித்துள்ளது.







