Monday, June 8, 2026
No menu items!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

“வீதிகளில் வாழ்ந்த சிறு கனவுகள்” – 21 சிறுவர்கள் பாதுகாப்பாக மீட்பு!

வீதியோரங்களில் யாசகம் பெற்றதோடு, சிறு பொருட்கள் விற்பனை செய்துவந்த 21 சிறுவர்கள், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சிறுவர்களுக்கு தற்போது தேவையான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சமீப காலமாக, சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பணியகம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு...

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் – அறிக்கை வெளியிட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்துக்கு அமைய, கொட்டாஞ்சேனை மற்றும் பம்பலப்பிட்டி காவல்துறையினரிடம் இருந்து இந்த விடயம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது. பாடசாலைக்குள்...

மாணவர்களைத் தாக்கிய தனியார் வகுப்பு ஆசிரியருக்கு வெளிநாட்டு பயணத்தடை!

தனது பிரத்தியேக வகுப்புகளுக்குச் சென்ற மாணவர்களைத் தாக்கிய தனியார் வகுப்பு ஆசிரியரின் விசாரணைக்கு உதவ விரும்பும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருந்தால் தெரிவிக்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 1929 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும் என அதிகாரசபை தெரிவித்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் நேற்று விதிக்கப்பட்டது. குறித்த ஆசிரியர் கடந்த...

பிரத்தியேக வகுப்புகளுக்குச் சென்ற மாணவர்களைத் தாக்கிய ஆசிரியர்!

தனது பிரத்தியேக வகுப்புகளுக்குச் சென்ற மாணவர்களைத் தாக்கிய தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. நுகேகொடை மற்றும் கம்பஹா பகுதிகளில் தனியார் வகுப்புகளை நடத்தும் ஆசிரியர் ஒருவர், தனது வகுப்பில் கல்வி கற்கும் மாணவனை ஒரு மாணவியைக் கொண்டு தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி...

சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்கும் வகையில் புதிய சட்டத்தரணிகள் குழு!

பல்வேறு காரணங்களுக்காக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், சட்டத்தரணிகளின் சேவையை தானாக முன்வந்து பெற்றுக்கொள்ளும் வகையில் சட்டத்தரணிகள் குழுவொன்றை ஏற்படுத்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராவதன் மூலம் கடமைகளுக்கு இடையிலான மோதல்களைத் தடுக்க இது எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அனைத்து தொழில் செலவுகள் மற்றும்...

சிறுவர்கள் தொடர்பாக 8,746 முறைப்பாடுகள்; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

2024 ஆம் ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக 8,746 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. அவற்றில் 580 முறைப்பாடுகள் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பானவை எனவும், 321 முறைப்பாடுகள் சிறுவர் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பானவை எனவும் அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது. அவற்றில் சிறுவர்களின் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பாக 2,746 முறைப்பாடுகளும்...

அதிகரித்த சிறுவர் துஷ்பிரயோகம்..!

2024ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மொத்தமாக 4,380 சிறுவர் துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. குறித்த அறிக்கையில் 787 சிறுவர்களுக்கு கட்டாயக் கல்வி பெற்றுக்கொடுக்கப்படுவதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. 290 சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன் 70 சிறுவர்கள் தொடர்பில் புறக்கணிப்பு அல்லது கொடுமைக்குள்ளாகுவது தொடர்பில் முறைப்பாடுகள்...

இணையவழி மோசடி தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்…!

இவ்வருடத்தின் கடந்த 5 மாத காலப்பகுதிக்குள் 1,093 முறைப்பாடுகள் இணையவழி மோசடிகள் தொடர்பில் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டு  பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சிரேஸ்ட தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுகல இது தொடர்பில் தெரிவிக்கையில், சமூக ஊடகங்கள் தொடர்பில் இதுவரை 7,916 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றில், குறிப்பாக சிறுவர் பாலியல் துஷ்பிரயோக...

சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவோருக்கு எச்சரிக்கை ..!

சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவது தொடர்பில் நாளாந்தம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார். எனினும், உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்த நாட்டில் குழந்தைகளை தொழிலாளர்களாக பயன்படுத்துவது மிகவும் குறைந்த அளவில் காணப்படுவதாகவும் கூறியுள்ளார். இலங்கையின் சட்டத்தின்படி, 16 வயதுக்குட்பட்ட எவரையும் பணியில் அமர்த்துவது...
- Advertisement -spot_img

Latest News

‘மேலதிக கட்டணத்தால் வாகன இறக்குமதிகள் குறையவில்லை’; சுங்கம்

மேலதிக கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், வாகன இறக்குமதிகள் கணிசமாக குறையவில்லை என இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சுங்கப்பிரிவு செய்தித் தொடர்பாளர் சந்தன புஞ்சிஹேவா, பெருமளவிலான...
- Advertisement -spot_img