தம்பகல்ல காவல்துறை பிரிவின் கொலொன்கந்தபிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டதாக தம்பகல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் தம்பகல்ல, கொலொன்கந்தபிட்டிய பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த பெண் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு பின்னர் எரித்துக் கொல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் 35 வயது மகன், 30 வயது மகள் மற்றும் 34 வயது மருமகள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் மொனராகலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த கொலை சம்பந்தமான மேலதிக விசாரணைகளை தம்பகல்ல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.








