சுமார் 4,000 போதை மாத்திரைகளுடன் வர்த்தகர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக காத்தான்குடி காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

காத்தான்குடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் குறித்த போதை மாத்திரைகளைச் சந்தேக நபர் விற்பனை செய்து வந்துள்ளார்.

35 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான 4,000 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர் மட்டக்களப்பு நீதிமான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here