இந்திய ஆட்டோ மொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (SIAM) 18 பேர் கொண்ட குழுவினர் 17 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை  இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.

இந்தக் குழுவினரில் வணிக வாகனங்கள், பயணிகள் வாகனங்கள்,இரு சக்கர வாகனங்கள் மற்றும் முச்சக்கர வாகனங்கள் உட்பட அனைத்து பிரிவுகளிலும் உள்ள முன்னணி இந்திய வாகன உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகள் அடங்குவர்.

இந்த விஜயத்தின் போது கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க ஆகியோரையும் குழுவினர் சந்தித்ததோடு, நிதி அமைச்சு, இலங்கை முதலீட்டு அதிகாரசபை மற்றும் இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகளையும் சந்தித்தனர்.

இந்திய துணை உயர் ஸ்தானிகர் கலாநிதி சத்யஞ்சல் பாண்டேவையும் குறித்த குழு சந்தித்து இலங்கையிலுள்ள இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து அவருக்கு விளக்கமளித்தனர்.

இந்த விஜயமானது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார உறவை வலுப்படுத்துவதோடு ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சியையும் உறுதிப்படுத்துகிறது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here