யாழ்ப்பாண மாவட்டத்தில் சில சபைகளில் தங்களது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் அங்கத்தவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இரண்டு சபைகளைத் தவிர ஏனைய 15 சபைகளுக்குமான வேட்பு மனுக்களை நாம் கையளித்து இருந்தோம் ,அவற்றில் பல சபைகளில் எமது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வடக்கு கிழக்கில் எம்மை ஓரம் கட்டி விட்டு ஆளும் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளை மாத்திரம் தேர்தலில் போட்டியிட வைக்கும் செயற்பாட்டை தேர்தல் திணைக்களம் செய்துள்ளதாகவே நாம் சந்தேகிக்கின்றோம்.

இது தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தொடர்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் அங்கத்தவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here