மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் உள்ளுராட்சி சபை வேட்பாளரின் அருள்ராஜா பிரேமாகரன் வீட்டின் மீது நேற்று இரவு (31/03/2025) மண்ணெண்ணெய் குண்டுத்தாக்குதலில் வீடு சிறு சேதம் ஏற்பட்டுள்ளதாக வெல்லாவெளி  பொலிஸார் தெரிவித்தனர்.

போரதீவுப்பற்று பிரதேசசபைக்கான தேர்தலில் போட்டியிடும்  அருள்ராஜா பிரேமாகரன் சம்பவதினமான இரவு மரண வீடு ஒன்றுக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் அவரது மனைவி, பிள்ளைகள் உறங்கி கொண்டிருந்த நிலையில் இனம் தெரியாதோரால் வீட்டின் மீது மண்ணெணய் குண்டுதாக்குதல் மேற்கொண்டதையடுத்து வீட்டின் கூரைமீது வீழ்ந்து வீட்டின் உட்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சீற் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் பியர் ரின்னில் மண்ணெணெய் அடைத்து இந்த குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக கண்டறிந்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

[மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here