மியான்மரை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (03) 3,000ஐ தாண்டியது.

கடந்த வெள்ளிக்கிழமை மியான்மரின் மண்டலேயின் புறநகர்ப் பகுதியில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 3,000ஐ தாண்டியுள்ளது.

பல நாட்கள் கடந்துவிட்ட போதிலும், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்பதற்கான மீட்புப் பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இது சீன மற்றும் இந்திய மீட்புக் குழுக்கள் உட்பட வெளிநாட்டு மீட்புக் குழுக்களின் ஆதரவுடன் செய்யப்பட்டது.

இதற்கிடையில், மியான்மர் இராணுவ ஆட்சிக்குழு, நாட்டில் ஆயுதமேந்திய குழுக்களுக்கு எதிரான தாக்குதல்களை இந்த மாதம் 22 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here